தமிழக பெண்ணுக்கு வயநாட்டில் நடந்த அதிர்ச்சி | Wayanad Landslide | Wayanad
குழந்தையுடன் குடும்பமே பறிபோனது சோகத்தின் உறைந்த குன்னூர் மக்கள்! நீலகிரி குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கவுசல்யா, வயது 26. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவுசல்யாவுக்கும், கேரளாவின் வயநாடு சூரல்மலையை சேர்ந்த விஜிஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கவுன்சல்யா சூரல்மலை அருகே உள்ள ஆஸ்பிடலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். செவ்வாயன்று வயநாடில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி கவுசல்யா குடும்பம் மொத்தமும் மண்ணில் புதைந்துவிட்டது. சேறு நிறைந்த பகுதியில் கவுன்சல்யாவின் குழந்தை உட்பட மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் உருக்கமாக பேசினார்.