/ தினமலர் டிவி
/ பொது
/ நிலச்சரிவு பயங்கரத்தின் திக் திக் நிமிடங்கள் wayanad| landslide| chooralmala|
நிலச்சரிவு பயங்கரத்தின் திக் திக் நிமிடங்கள் wayanad| landslide| chooralmala|
வயநாடு சூரல்மலையில்தான் நீத்துவின் வீடு இருந்தது. மேப்பாடியில் உள்ள டாக்டர் மூப்பன் மருத்துவ கல்லூரியின் ரிசப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். செவ்வாய் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பெட்ரூமுக்குள் பயங்கர சத்தம் கேட்டது திடுக்கிட்டு எழுந்தார் நீத்து. கூடவே இன்ஜின் ஆயில் வாடையும் வீசியது. அடித்து வரப்பட்ட வாகனங்கள் வீட்டு வாசலில் கிடந்ததுதான் காரணம். பதட்டத்துடன் கணவர் ஜோசப்பை எழுப்பினார். சேறுசகதியுடன் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததை பார்த்து பயந்தனர். நிலச்சரிவு ஏற்பட்டதை உணர்ந்தனர். ஆற்றை ஒட்டி வசித்து வந்த சிலர் வீடுகளை இழந்ததால் பீதியில் நீத்துவின் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தனர். எல்லோர் கண்களிலும் மரண பயம்.
ஆக 03, 2024