வயநாட்டில் நடந்த இந்த கொடுமை மட்டும் யாருக்கும் வரக்கூடாது | wayanad landslide | chooralmala
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கனவுகள். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் வாழ விதவிதமான ஆசைகள். ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கணப்பொழுதில் கனவுகள் கலைந்தன. ஆசைகள் நிறாசையாகின. சிலருக்கு உடல் இருந்தது; உயிர் இல்லை. சிலருக்கு உயிரும் இல்லை; உடலும் இல்லை. தூக்கத்திலேயே 550க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது வயநாடு நிலச்சரிவு. 400 பேர் சடலம் கிடைத்து இருக்கிறது. இன்னும் 150 பேர் கதி என்னவென்றே தெரியவில்லை. இப்படி ஒரு இயற்கை பேரிடர் இதற்கு முன் கேரளா கண்டது இல்லை. அவ்வளவு கொடூரமானது வயநாடு நிலச்சரிவு. நிலச்சரிவுக்கு முதல் நாள் இரவில் மனைவியுடன் மகிழ்ச்சி பொங்க பொங்க பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் மறுநாள் இல்லை. மயிரிழையில் மனைவி உயிருடன் வந்தார். கணவன் மரணம் அடைந்தார். இடி விழுந்தது போல் இருந்தது மனைவிக்கு. உயிர் பிழைத்தும் சடலம் போல் உணர்ந்தார். இந்த துயர சம்பவத்தின் ஒவ்வொரு நொடியும் சோகம் தெறிக்கும். அப்படி என்ன நடந்தது.... பார்க்கலாம்.