நம்பி இறங்கி தர்மசங்கடத்துக்கு ஆளான கேரள அரசு | Wayanad Land Slide | Wayanad CM Fund
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை, வெள்ளத்தால் உண்டான நிலச்சரிவில் பல கிராமங்கள் அடியோடு அடித்து செல்லப்பட்டது. முண்டக்கை, சூரல்மலை கிராமங்கள் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்தது. இந்த கோர பேரழிவில் சிக்கி 400க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். கேரள வரலாற்றில் மிகப்பெரிய பேரிடராக வயநாடு நிலச்சரிவு பதிவாகி உள்ளது. இப்போது தான் வயநாடு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. ஏராளமானோர் தாமாக முன் வந்து கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்கின்றனர்.