திடுக்கிட வைக்கும் வயநாடு நிலச்சரிவு இழப்பு பட்டியல் | wayanad landslide | Mundakkai | Chooralmala
வயநாடு நிலச்சரிவு பூதம் விழுங்கியது என்னென்ன? அதிர்ச்சி ரிப்போர்ட் நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு துயரத்தில் இருந்து இன்னும் கேரளா மீண்டு வரவில்லை. இன்று 7வது நாளாக மீட்பு பணி துவங்கியது. ராணுவம், கடற்படை, தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என 1500 பேர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவால் இதுவரை என்னென்ன இழப்புகள் நேர்ந்து இருக்கின்றன என்பது தொடர்பான முதல்கட்ட புள்ளி விவரம் வெளியாகி அதிர வைத்துள்ளது. குறிப்பாக கேரளா இதுவரை பார்க்காத அளவு இந்த பேரிடரில் மரணம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 385 பேர் மரணம் அடைந்து இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் சாலியாறு படுகை, கரை பகுதியில் இருந்து 25 சடலங்கள் கிடைத்தன. தொடர்ந்து சடலம் கிடைத்த வண்ணம் உள்ளது. இந்த நிலச்சரிவில் கொஞ்சம் நஞ்சம் அல்ல; மொத்தம் 1,208 வீடுகள் இருந்த தடம் தெரியாமல் நொறுங்கி விட்டன.