/ தினமலர் டிவி
/ பொது
/ வாட்டும் வெயிலை விரட்ட வருகிறது கனமழை | Weather | Rain | Rain News | Rain Alert
வாட்டும் வெயிலை விரட்ட வருகிறது கனமழை | Weather | Rain | Rain News | Rain Alert
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து ஓரளவுக்கு வெப்பம் தணிந்துள்ளது இந்த சூழலில் 17 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறி உள்ளார். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
ஏப் 04, 2025