வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ; மழை எங்கு எல்லாம்? | IMD | Weather | Rain Alert
தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த இரண்டு தினங்களில், வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதையொட்டி நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுச்சேரியில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 29ம் தேதி வரை மழை தொடரும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது.