உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் எங்கெங்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் எங்கெங்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு

#IMD #VanilaiArivippu #Monsoon #RainUpdate #TNRain #WeatherUpdate தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வழிமண்டலத்தில் ஒரு பலவீனமாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. சராசரி கடல் மடத்தில் தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் மலை பகுதிகள், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். இது தவிர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இயல்பு வெப்ப நிலையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளது. 4ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூன் 1 முதல் ஜூலை 31ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வழக்கமாக பெய்யும் சராசரி மழை அளவை விட இம்முறை, 21 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை