உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்யாண விருந்தில் நடந்த சோகம்: கதறிய உறவினர்கள் | Wedding feast | Fight for meat | Andhra pradesh |

கல்யாண விருந்தில் நடந்த சோகம்: கதறிய உறவினர்கள் | Wedding feast | Fight for meat | Andhra pradesh |

தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம் நவிப்பேட்டையைச் சேர்ந்த பெண்னுக்கும் நந்திப்பேட்டை மண்டலத்தை சேர்ந்த மாப்பிள்ளைக்கும் நவிப்பேட்டை மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இன்று மணமகள் வீட்டார் சார்பில் உறவினர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதில் மாப்பிள்ளை வீட்டாரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மட்டன் கறி குறைவாக வைத்ததால், பந்தி பரிமாறிய மணமகளின் உறவினர்களிடம் முறையிட்டனர். அதன் பிறகும் மட்டன் பீஸ் வைக்காமல் அலட்சியம் செய்ததால் இரு தரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கி கொண்டனர். இந்த சண்டையில் 8 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை