உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொங்கலுக்கு முந்தைய வார சந்தை விற்பனை அமோகம் | Weekly Market | Pongal | pongal 2025

பொங்கலுக்கு முந்தைய வார சந்தை விற்பனை அமோகம் | Weekly Market | Pongal | pongal 2025

திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் இன்று வார சந்தை கூடியது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் விற்பனைக்கு வந்தது. அதிகாலை 3 மணிக்கு துவங்கிய வியாபாரம் 9 மணிக்குள் முடிந்தது. சந்தை வளாகத்தில் இடம் போதாமல் சர்வீஸ் ரோட்டிலும் மக்கள் கூடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போட்டி போட்டு ஆடு, சேவல்களை வாங்கி சென்றனர். உயிருடன் நாட்டு கோழி கிலோ 450, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் கிலோ 700ஐ தாண்டி விற்பனை ஆனது. சண்டை இன சேவல்கள் 3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரையிலும் விற்றது.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !