மேற்குவங்கம் அருகே குலைநடுங்கி நிற்கும் தமிழக மாணவர்கள் | West Bengal | Bangladesh
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிகளுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுக்கு எதிர்ப்பு வெடித்துள்ளது. 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று வங்கதேசம் தனி நாடானது. அப்போது தொடங்கி போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018ல் நடந்த மாணவர் போராட்டத்தை தொடர்ந்து இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம் கீழமை கோர்ட் இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் உறுதி செய்தது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து அதனை அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்தது. இதனால் வங்கதேசம் முழுக்க மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 133 பேர் இறந்தனர். அசாதாரணமான சூழல் நிலவி வரும் நிலையில் வீதி முழுக்க கலவர காடாக காட்சி அளிக்கிறது. கலவரத்தை அடக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோரை கண்டதும் சுட அரசு உத்தரவிட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.