உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தலின்போது நடுநிலை தவறிய 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் | West Bengal | Election Commission

தேர்தலின்போது நடுநிலை தவறிய 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் | West Bengal | Election Commission

294 சட்டசபை தொகுதிகள் உள்ள மேற்குவங்க மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடந்தது. மீதமுள்ள 142 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், தேர்தலின் பணியின்போது நடுநிலையுடன் செயல்பட தவறியது, ஒருதலைபட்சமாக செயல்பட்டது, முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களுக்காக 5 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. டைமண்ட் ஹார்பர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கராய், டிஎஸ்பி சஜல் மண்டல், டைமண்ட் ஹார்பர் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர்கள் மௌசம் சக்ரவர்த்தி, அஜய் பாக் மற்றும் உஸ்தி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி சுபேச்சா பாக் ஆகிய 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கராய் குறித்து விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமின்றி, தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளை சரியாக வழிநடத்த தவறிய டயமண்ட் ஹார்பர் மாவட்ட எஸ்பி இஷானி பாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. #WestBengalElections #ECIAction #PoliceSuspension #DiamondHarbour #SandeepGarai #ElectionIntegrity #BengalPolls2026 #ModelCodeOfConduct #ElectionUpdate

ஏப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை