உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு வங்கத்தின் மாற்றத்துக்கு முக்கிய பங்காற்றிய பெண்கள் West Bengal | Pm modi | Annapurna yojana

மேற்கு வங்கத்தின் மாற்றத்துக்கு முக்கிய பங்காற்றிய பெண்கள் West Bengal | Pm modi | Annapurna yojana

மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு 3000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாஜ அரசு செயல்படுத்தி வருகிறது. மோடியின் பிறந்த நாளையொட்டி, 4வது தவணையாக நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் உரை ஆற்றும்போது, பெண்களின் வாழ்வில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் முன்னுரிமை எனக்கூறினார். இந்த ஆண்டு மே4ல் மேற்கு வங்கம் புதிய மாற்றத்தை தேர்வு செய்தது. தாய்மார்களும் சகோதரிகளும் அதற்கு முக்கிய பங்கு ஆற்றினர். உங்கள் வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து உள்ளீர்கள். பல விஷயங்களுக்காக நீண்ட நாட்கள் காத்து இருந்துள்ளீர்கள். அதனால் தான் பேச்சு குறைவு செயல் அதிகம் என்ற முக்கிய கொள்கையை பாஜ முன்னெடுத்து செல்கிறது அளவில்லாத குடும்ப பொறுப்புகளை சுமக்கும் பெண்கள், தினமும் எடுக்கும் முடிவுகள் மூலம் குடும்பத்தை திறம்பட நிர்வகிக்கின்றனர். அத்தியாவசிய செலவுகளுக்கான நிதி சார்ந்த கவலைகளை தீர்ப்பதன் மூலமாகவே பெண்களின் தன்னம்பிக்கை உயர்கிறது. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல திட்டங்கள் துவங்கப்பட்டன. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கும், மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது என்று மோடி கூறினார். #West_Bengal #Pm_modi #Annapurna_yojana #Modi_speech #Kolkatta #Women_empowerment #Financial_assitance #Women_fund #Suvendu_adhikari #annapurna_divas #PM_modi_scheme #Video_conference #WBgovt #WBpolitics #Politicalnews #currentaffairs

செப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ