உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிசிஐ விதித்த 5 ஆண்டு தடை நீக்கம் | WhatsApp | CCI | Meta

சிசிஐ விதித்த 5 ஆண்டு தடை நீக்கம் | WhatsApp | CCI | Meta

பயனர்களின் தனிப்பட்ட தகவல் Watsapp கொடுக்க அனுமதி! மெட்டாவுடன், தன் பயனர்களின் தகவலை பகிர வாட்ஸ் ஆப்புக்கு 2024 நவம்பரில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டி ஆணையம் தடை விதித்தது. விளம்பரம் மற்றும் விளம்பரம் அல்லாத பயன்பாடுகளுக்கு பயனர்களின் தகவலை பரிமாறுதல், தனிப்பட்ட விபர கொள்கைக்கு எதிரானது என்றும் கூறி தனிப்பட்ட தகவல் பகிர்வுக்கு ஐந்து ஆண்டுகள் தடை, 213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தேசிய கம்பெனி சட்ட முறையீட்டு தீர்ப்பாயத்தில், வாட்ஸ் ஆப் மனு தாக்கல் செய்தது. விசாரித்த தீர்ப்பாயம் சிசிஐ விதித்த ஐந்து ஆண்டு தடை, வாட்ஸ் ஆப் வணிக மாடலையே சீர்குலைக்க செய்து விடும் என கூறியுள்ளது.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை