வெற்றி விழாவுக்கு ஏன் அவசரம்? CM செயலாளர் சொன்ன வினோத காரணம் RCB victory celebration IPL 11 fans
ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு பெங்களூரு சட்டசபை வளாகத்தில் பாராட்டு விழா இன்று நடந்தது. முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர், பெங்களூரு அணி வீரர்களை கவுரவித்தனர். இந்த விழா நடந்தபோதே சின்னசாமி ஸ்டேடியம் முன் நெரிசல் ஏற்பட்டது. 2 ரசிகர்கள் பலியானதாக முதலில் வெளியான தகவல்கள் கூறின. இதனால் வீரர்கள் பஸ்சில் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு சென்று அங்கு நடந்த வெற்றி விழாவில் பங்கேற்றனர். விழாவை காண ஸ்டேடியத்தினுள் பல ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். விராத் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி உரையாற்றினர். நெரிசல் ஏற்பட்ட பிறகு விழா நடந்த நிலையில், அவசர அவசரமாக வெற்றி விழா முடித்துக் கொள்ளப்பட்டது.