Windows ஹேக் செய்யப்பட்டதா? வல்லுநர் விளக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் விண்டோஸ் இயங்கு தளத்தை பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் முடங்கிப்போய் உள்ளன. பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் தானாக ஷட் டவுன் அல்லது ரீஸ்டார்ட் ஆகி விடும், கம்ப்யூட்டர் ஆன் ஆனாலும் வெறும் ப்ளூ ஸ்கிரீன் மட்டும் தோன்றும். இதனால் ஐடி, வங்கி, மருத்துவ, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை BSOD எனப்படும் ப்ளூ ஸ்க்ரீன் அப் டெத் எரர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சொல்கின்றனர்.
ஜூலை 19, 2024