கடைசி நேரத்தில் திருடனுக்கு வந்த சோதனை | wine shop | Theft
தெலங்கானாவின் நரசிங்கி பகுதியில் பர்ஷா கவுட் என்பவர் ஒயின் ஷாப் வைத்துள்ளார். வழக்கம்போல ஞாயிறன்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். இரவு 12 மணிக்கு மேல் ஒயின் ஷாப் கூரையின் இரும்பு ஷீட்களை வெட்டி ஆசாமி உள்ளே நுழைந்தான். கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டான். பையில் பணம் நிரம்பினாலும் மதுவை விட்டு செல்ல மனம் விரும்பவில்லை.
டிச 31, 2024