உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவை அலறவிடும் மிகப்பெரிய பனிப்புயல் winter storm fern | us winter storm |

அமெரிக்காவை அலறவிடும் மிகப்பெரிய பனிப்புயல் winter storm fern | us winter storm |

அமெரிக்கா முழுதும் கடும் வரலாறு காணாத பனிப்புயல் வீசக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த பனிப்புயலுக்கு வின்டர் ஸ்டார்ம் பெர்ன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக பல மாகாணங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கும்; அளவுக்கு அதிகமான பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பனிப்புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கக் கூடும் என்பதால், நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை 24 கோடி பேர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு கரோலினா வரை மோசமான அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் கணித்துள்ளது. டெக்சாஸ், ஓக்லஹோமாவில் நேற்று முன்தினம் இரவு முதல் பனிப்பொழிவு அதிகரித்து விட்டது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டது. #winterstormfern #uswinterstorm #monsterwinterstorm #winterweather #snowstorm #winterwonderland #severeweather #blizzardconditions #iceandsnow #extremeweather #winteradventure #stormwatch #coldfront #weatherupdates #nature #climatechange #snowfall #winterchill #staywarm #prepareforstorm

ஜன 25, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ganesh
ஜன 25, 2026 12:39

சார், விசா வாங்காமல் நீங்கள் மீறிய சுற்றுசூழல் விதிமீரளுக்காக பனி புயல் வருது.. உடனே 1000% வரி விதிங்க...


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை