மனைவி செய்த துரோகம்:அண்ணியை தீர்த்த கொழுந்தன் woman dies man attacks with sword brother in law il
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 44). இவர் வெளிநாட்டில் ெஹல்பராக வேலை செய்கிறார். இவரது தம்பி சுரேஷ் (வயது 40). அண்ணன் வழியில் இவரும் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்தனர். லட்சுமணன் சங்கீதா என்ற பெண்ணை மணந்தார். அவர் தங்கையை சுரேஷ் கல்யாணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு லட்சுமணன், சுரேஷ் இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். சங்கீதாவும், அவர் தங்கையும் சொந்த ஊரிலேயே இருந்தனர். அப்போது, சுரேஷுக்கும் அவர் மனைவிக்கும் தினமும் குடும்பத்தகராறு ஏற்படும். கணவர் வெளிநாட்டில் இருந்தாலும்கூட தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என நினைத்தார் தங்கை. இதனால் சுரே ைஷ விட்டு பிரிந்து இன்னொருவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் சுரேஷ் விரக்தியில் இருந்தார். வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அண்ணன் லட்சுமணன் வெளிநாட்டில் இருந்த நிலையில், அண்ணி சங்கீதாவுடன் சுரேஷுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் ஊரில் பரவ, வெளிநாட்டில் இருக்கும் லட்சுமணன் காதுக்கு விஷயம் போனது. அவர் போன் செய்து மனைவி சங்கீதாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் தன் வீட்டுப்பக்கம் வர வேண்டாம் என கொழுந்தன் சுரேஷிடம் சங்கீதா திட்டவட்டமாக கூறிவிட்டார். போன் போட்டாலும் எடுக்கவில்லையாம். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் இன்றுமாலை அண்ணி வீட்டுக்கு வந்தார்.