உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரிச் உமன் போல் நடித்து பண மோசடி செய்த பெங்களூரு பெண் கைது! Women arrested | Financial Fraud | Beng

ரிச் உமன் போல் நடித்து பண மோசடி செய்த பெங்களூரு பெண் கைது! Women arrested | Financial Fraud | Beng

ெங்களூரை சேர்ந்தவர் சவிதா. வயது 49. பசவேஸ்வரா நகரில் வசித்து வந்த இவர், காலை நேரங்களில் பணக்கார பெண்கள் வாக்கிங் செல்லும் சாலை, பார்க்குகளில் அடிக்கடி வலம் வந்தார். தன் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், பல்வேறு துறைகளில் முதலீட்டு ஆலோசகராக பணியாற்றுவதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். கணவரின் தொழிலுக்கு தானும் உதவுவதாக கூறிய சவிதா, தன்னை நம்பி ரியல் எஸ்டேட், தங்கம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால், மிகக் குறுகிய காலத்தில் 4 மடங்கு லாபம் கிடைக்கும் என கூறினார். மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பிக்களுடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருப்பதாக கூறிய சவிதா, தனது பொருளாதாரம் சிறந்த வகையில் இருப்பதை காட்டிக் கொள்ள, பணக்கார பெண்களை அழைத்து அடிக்கடி பார்ட்டி நடத்தியுள்ளார். அதுவும் மாநகரின் முக்கியமான ரெஸ்டாரன்ட்களுக்கு அழைத்து, லட்சங்களில் செலவு செய்து பார்ட்டி நடத்தியுள்ளார். இவரது மிடுக்கான தோற்றம், பார்ட்டிக்காக செலவிடும் தொகை, பேச்சு ஆகியவற்றை பார்த்து ஏமாந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், பல லட்சங்களை முதலீடு செய்தனர். சிலர் ரொக்கமாகவும், பலர் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமும் சவிதாவிடம் முதலீடு செய்தனர். பணம் பெற்று ஓராண்டு ஆகியும் அசலையோ, லாபத்தையோ தராததால், சவீதாவிடம் முதலீடு செய்த பெண்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் சிலர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில், சவிதா 5 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் துருவி விசாரித்ததில், சவிதா ஏற்கனவே இது போன்ற பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளி வந்ததும் தெரிந்தது. சவிதா மற்றும் அவருக்கு உதவிய புனீத் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். சவிதாவுக்கு உதவிய 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சவிதா கைதான நிலையில், அவரிடம் ஏமார்ந்தோர் தாமாக முன் வந்து புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ