விக்கிரவாண்டி தேர்தல் வாக்குச்சாவடியில் பரபரப்பு | vikiravandi | Election
ஓட்டு போட நின்றிருந்த பெண்ணுக்கு வெட்டு! விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. டி.கொசப்பாளையம் சாவடியில் ஓட்டு போட வரிசையில் காத்திருந்த கனிமொழி என்பவரை திடீரென ஒருவர், சிறிய கத்தியால் கழுத்தில் வெட்டினார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர். வெட்டு விழுந்த பெண்ணுக்கு கழுத்தில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. கனிமொழியை வெட்டியவர் அவரது முன்னாள் கணவர் ஏழுமலை என்பது விசாரணையில் தெரிந்தது. இவர் கொலை வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இதனிடையே, கணவரை பிரிந்து வேறு ஊருக்கு சென்ற மனைவி, மற்றொருவருடன் வாழ்ந்து வந்தார். அவர் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஏழுமலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கனிமொழி ஓட்டு போட வந்தது தெரிந்ததும் கத்தியால் வெட்டியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டார்.