பரிதாப நிலையில் TN பெண்கள் இந்த வீடியோ பார்த்தால் புரியும்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் ஊராட்சிக்குட்பட்டது கழனிகாட்டூர் கிராமம். இங்கு, நாகாவதி அணை உள்ளது. இந்த அணையில் மீன்வளர்த்து விற்க, தனியாருக்கு அரசு மீன்பாசி குத்தகை விட்டுள்ளது. குத்தகை எடுத்த நபர்கள் மீன்களை யாரும் திருடிச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அணையைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். நாகாவதி அணையை ஓட்டியுள்ள கழனிக்காட்டூர், ஆத்துகொட்டாய், மத்தாளப்பள்ளம், கோம்பை ஆகிய கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், காலங்காலமாக நாகாவதிஅணையை ஓட்டியுள்ள கரையோர பகுதிகளில் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர். நாள்தோறும் காலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கவும் அணைப்பகுதிக்கு தான் செல்கின்றனர். இந்நிலையில், நானாவதி அணை கரையோர பகுதிகளில் பெண்கள் குளிக்கும் வீடியோ தர்மபுரி மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குத்தகை எடுத்தவர்கள் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராக்களில்தான் அந்த வீடியோ பதிவாகியிருப்பது தெரிய வந்தது. ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவரின் வாட்ஸ் அப்புக்கு அவர் மனைவி குளிக்கும் வீடியோவே வந்துள்ளது. அதன்பிறகே, இந்த விவகாரம் விஸ்வரூபம் ஆனது. வார்டு உறுப்பினர்கொந்தளித்து எழுந்தார். மீன்பாசி குத்தகை எடுத்தவர்களை தட்டிக் கேட்க இரு தரப்புக்கும் தகராறு மூண்டது. வார்டு உறுப்பினரை சில ஆசாமிகள் தாக்கியுள்ளனர். சிசிடிவி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாகர்கூடல் ஊராட்சி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #WomenSafety #CCTVFootage #DharmapuriDistrict #NagarkoodalPanchayat #WomenProtest #WardMemberWife #PoliceInaction #CrimeAwareness #EmpowerWomen #SafetyFirst #JusticeForWomen #CommunityAction #StandAgainstViolence #WomenRights #SocialAwareness