உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை பெண்கள் விடுதியில் அதிகாலையில் சோக சம்பவம் | Madurai | Fire Accident | Women hostel

மதுரை பெண்கள் விடுதியில் அதிகாலையில் சோக சம்பவம் | Madurai | Fire Accident | Women hostel

பெண்கள் விடுதியில் தீ 2 ஆசிரியர்களுக்கு துயரம் என்ன நடந்தது? மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டாரபாளைம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்த சூழலில் இன்று அதிகாலை பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்து தீ பற்றியது. அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் பலர் அலறியடித்து வெளியேறினர். தீ மளமளவென பரவி அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சு திணறலும் ஏற்பட்டது. தப்பி வெளியே வந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளே சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோக சம்பவமாக சிகிச்சை பலனின்றி பள்ளி ஆசிரியர்கள் பரிமளம் மற்றும் சரண்யா ஆகிய இருவர் இறந்தனர். பரிமளம் அரசு பள்ளி ஆசிரியை என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை