குளிர்காலம் வருவதால் ராமருக்கு விசேஷ ஏற்பாடுகள் | Woollen Wear | RAM LALLA | Ayodhya | Winter
உத்தரபிரதேசம் அயோத்தி கோயிலில் கடந்த ஜனவரி 22ல் பால ராமர் சிலை பிரதமர் மோடி தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பகவான் ஸ்ரீ பால ராமருக்கு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடைகளை தேர்வு செய்து ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அணிவித்து வருகிறது. கோடைக்காலத்தில் இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த பருத்தி ஆடைகள் ராமருக்கு சாத்தப்பட்டது. தற்போது குளிர்காலம் துவங்க உள்ளதால் ஸ்ரீ பால ராமருக்கு கதகதப்பான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நவம்பர் 20ல் அகான் பஞ்சமி தொடங்குகிறது. அன்று முதல் குழந்தை ராமரை கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காக கம்பளி ஆடைகளும், பஷ்மினா சால்வைகளும் சாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் ராமருக்கான உடைகளை தயாரித்து வருகின்றனர். ராமருக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் தயிர் சாதத்திற்கு பதிலாக பாயசம், உலர் பழங்கள் படைக்கப்பட உள்ளன. குளிர்காலம் தொடங்கியவுடன் ராமரை வெதுவெதுப்பான நீரில் தான் குளிப்பாட்டுவர். கருவறை கதகதப்பாக இருக்க ஹிட்டர்கள் நிறுவப்படும். கடுமையான குளிர்கால நாள்களில் ப்ளோயர் எனப்படும் சூடான காற்று வீசும் கருவியும் பொருத்தப்படும். கோயிலில் உள்ள ராமரின் மூன்று சகோதரர்கள் மற்றும் முதல் தளத்தில் ராம் தர்பாரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கும் குளிர்கால ஆடைகள் உடுத்தப்படும்.