உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆணித்தரமாக சொல்லும் சர்வதேச விஞ்ஞானிகள் World Weather Attribution | Environment Scientists | Wayana

ஆணித்தரமாக சொல்லும் சர்வதேச விஞ்ஞானிகள் World Weather Attribution | Environment Scientists | Wayana

World Weather Attribution என்ற சர்வதேச அமைப்பு வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்கிறது. இந்த அமைப்பில் பல நாட்டு விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். வயநாடு நிலச்சரிவு குறித்து இந்தியா, அமெரிக்கா, ஸ்வீடன், பிரிட்டனைச் சேர்ந்த 24 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். காடுகள் அழிப்பு போன்ற பல காரணங்களால் பேரழிவு ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தால் பூமி வெப்பமயமாகும்போது கனமழையும் அதிகரிக்கிறது. அதன் காரணமாகவும் பேரழிவு ஏற்படுகிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலத்தில் இருந்து இதுவரை பூமியின் வெப்பநிலை 1.3 டிகிரி அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களை விட வயநாட்டில் 10.8 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்தது. இதற்கு முன் 1924, 2019ல் நடந்துள்ளது. இது 3வது முறை.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ