3ம் உலகப்போரில் யார் யார்? திடுக் தகவல் Trump vs Zelensky | US vs EU | Russia vs Ukraine | starmer
உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது வெள்ளை மாளிகை சம்பவம். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நடத்திய பேச்சு வார்த்தை களேபரமானது. இரு அதிபர்களும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர். போர் நிறுத்த பேச்சை விட ரஷ்யா மீது குறை சொல்வதிலேயே ஜெலன்ஸ்கி குறியாக இருந்ததால் டிரம்ப் டென்ஷன் ஆனார். துணை அதிபர் வான்சும் ஜெலன்ஸ்கிக்கு செக் வைப்பது போல் பேசினார். போரில் ஈடுபட்டுள்ள நாட்டுக்கு தான் உண்மையான வலியும் கள நிலவரமும் தெரியும். ரஷ்யா எப்படிப்பட்ட நாடு என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். அமெரிக்காவின் இரு பக்கமும் கடல் இருப்பதால் போர் வராது என்று மட்டும் நினைக்காதீர்கள். உங்களையும் ஒரு நாள் ரஷ்யா தாக்க கூடும் என்று ஜெலன்ஸ்கி சொன்னார். இதை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போனார் டிரம்ப். அமெரிக்காவுக்கு பாடம் நடத்தும் இடத்தில் நீங்கள் இல்லை என்று விளாசினார்.