உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எக்ஸ் தளத்திற்கு என்னாச்சு? உலகம் முழுவதும் பரபரப்பு X down for thousands of users globally

எக்ஸ் தளத்திற்கு என்னாச்சு? உலகம் முழுவதும் பரபரப்பு X down for thousands of users globally

உலகளவில் எக்ஸ் சமூக வலைதளத்தை சுமார் 65 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இன்றிரவு 7 மணியளவில் திடீரென எக்ஸ் தளம் தற்காலிகமாக முடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்காசியா உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கணக்குகள் செயல்படாததால் அவதி அடைந்தனர். வலைதளங்களின் முடக்கம் குறித்து அறிய பயன்படும் டவுன் டிடெக்டர் தளத்தில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்கள் எக்ஸ் தளம் முடங்கியது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 1600 பேர் பயனர்கள் தங்கள் எக்ஸ் பக்கங்களை லாக் இன் செய்ய முடியவில்லை. சிலருக்கு போஸ்ட் போடுவதிலும், நோட்டிபிகேஷன்களை பார்க்கவும் முடியவில்லை. இன்னும் சிலருக்கு மற்றவர்களின் கணக்குகளை பார்க்க முடியவில்லை. தங்கள் எக்ஸ் பக்கம் முடங்கிய ஆதங்கத்தை மற்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் வெளிப்படுத்தினர். சிறிது நேரத்திற்கு பின் சிலரின் கணக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்தது. பிரச்னைக்கான காரணம் பற்றி எக்ஸ் தள நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும் சர்வர் பிரச்னை அல்லது பராமரிப்பு காரணமாக தளம் தற்காலிகமாக முடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. #XDown #GlobalOutage #IndiaAffected #TechIssues #SocialMediaDown #UserImpact #DigitalDisruption #OnlineServices #TechNews #InternetOutage

பிப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ