உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆயுளை நீட்டிப்பது பற்றி பேசிய தலைவர்கள் | Putin | Xi Jinping | Discussion | Organ transplants | Immo

ஆயுளை நீட்டிப்பது பற்றி பேசிய தலைவர்கள் | Putin | Xi Jinping | Discussion | Organ transplants | Immo

2ம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததை வெற்றி தினமாக சீனா ஆண்டுதோறும் செப்டம்பர் 3ம் தேதி கொண்டாடுகிறது. அதன்படி 80வது வெற்றி தினத்தையொட்டி சீனாவின் பீஜிங்கில் நேற்று பிரமாண்ட ராணுவ அணிவகுப்புகள் நடந்தன. நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் பங்கேற்றனர். அவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து நடந்து சென்றபோது, ​​உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து பேசியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக புடினும் ஜி ஜின்பிங்கும் விவாதித்தது ஹாட் மைக்கில் (Hot mic) பதிவாகி இருக்கிறது. பீஜிங்கில் நடந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நேரடியாக லைவ் செய்யப்பட்டது. இதன் சிசிடிவி ஒளிபரப்பை ஆன்லைனில் 1.9 பில்லியன் பேரும், டிவியில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்ததாக சீனாவின் ரேடியோ, டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ