யமுனை மாசுபட யார் காரணம்; கெஜ்ரிவால், நயாப் சிங் மோதல் Arvind Kejriwal| AAP| BJP| Haryana CM |
டில்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. டில்லியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றிக்காக போராடி வருகிறது. கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜ மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பிரசாரத்தின் உச்சமாக, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி டில்லிக்கு வரும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக கெஜ்ரிவால் பேசினார். இது, டில்லி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு தொடர்பாக, விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. யமுனை நதியில் அளவுக்கு அதிகமான அமோனியா கலந்திருப்பதைத்தான் அப்படி சொன்னேன் என கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார். இச்சூழலில், தேர்தல் கமிஷன் மீதே கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன் வைத்தார்.