மனிதனை வேட்டையாடும் ஓநாய்களுக்கு வேட்டு! Operation Bhediya| man eating wolf| UP| yogi adhityanath
கூண்டு வைத்து யூஸ் இல்லை பார்த்ததும் சுட்டுத்தள்ளுங்க! ஆபரேஷன் பேடியா ரெடி உத்தரபிரதேசத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மனிதர்களை ஓநாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மஹாசி தெஹ்சில் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாகவே ஓநாய்கள், பயம் காட்டி வருகின்றன. இதுவரை, 8 குழந்தைகள் உட்பட 10 பேரை ஓநாய்கள் கொன்றுள்ளன. 34 பேர் காயமடைந்துள்ளனர். ஓநாய்களை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கினர். ட்ரோன்கள் மூலம் இரவு பகலாக ஓநாய்களை கண்காணித்து, குறிப்பிட்ட இடங்களில் கூண்டு வைத்தனர். இதுவரை 4 ஓநாய்கள் மட்டும் பிடிபட்டன. அவை மனிதர்களை தின்றுள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக அவற்றின் கழிவு மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஓநாய்களின் மனித வேட்டை தொடர்வதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓநாய்களை பிடிக்க முடியாவிட்டால் அவற்றை சுட்டுத்தள்ளுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார். இதையடுத்து ஆபரேஷன் பேடியாவுக்கு (Operation Bhediya) வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். பேடியா என்ற ஹிந்தி வார்த்தைக்கு ஓநாய் என்று அர்த்தம். ஓநாய்களை உயிருடன் பிடிக்கத்தான் முயற்சிப்போம்; அது முடியாவிட்டால் சுடுவோம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.