குறுகிய அரசியலுக்காக மொழிசர்ச்சையை கிளப்புகிறார்கள்| Yogiadityanath| Stalin | hindi issue | DMK BJP
புதிய தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழி கொள்கையை, இந்தி திணிப்பு எனக்கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த விஷயத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தார். இந்த சூழலில் மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை, யோகி ஆதித்யநாத் மீண்டும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி: உத்தரபிரதேச பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் உத்தரபிரதேசம் பாதிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என்ன குறைந்து போய்விட்டோம்? பல மொழிகள் கற்பிக்கப்படுவதால், இங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.