உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள்

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள்

சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி நிறுவனம் அருகே போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் தனிப்படை போலீசார் கண்காணித்தனர். சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனையிட்டதில், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தார். அவர் திருமங்கலத்தை சேர்ந்த லோகேஷ் என்பது தெரிந்தது. அவருடன் சேர்ந்து அதே பகுதியில் மேலும் 3 பேர் போதை விற்பனை செய்வது தெரிந்தது. தேவேந்திரன், ராஜேஷ், ஆலன் கிரிகெரி ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தது. 4 பேரும் 24 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து 6-கிராம் மெத்தம்பெட்டமைன், 10 -போதை மாத்திரைகள், 4 -செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை