உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசாரை அசிங்கமாக திட்டி கலாட்டா செய்த இளைஞர்கள் youth scolding woman police officer| chennai

போலீசாரை அசிங்கமாக திட்டி கலாட்டா செய்த இளைஞர்கள் youth scolding woman police officer| chennai

சென்னையில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரி சிக்னல் அருகே நேற்றிரவு டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய உமா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது, 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்தனர். வண்டியில் நம்பர் பிிளேட் இல்லை. அவர்களை போலீசார் மடக்கியதும் ஒருவர் ஓடிவிட்டார். 2 இளைஞர்களை விசாரித்தபோது ஒருவர் தான் ஒரு வழக்கறிஞர் என உதார் காட்டினார். வண்டி ஆவணங்களை கேட்டபோது அவர்களிடம் எதுவும் இல்லை. இன்னொரு இளைஞர், போலீசாரையே மிரட்டும் தொனியில் பேசினார். அவர்கள் குடிபோதையில் இருப்பது தெரிந்தது. பிரீத்அலைசர் breathalyzer சாதனம் மூலம் சோதித்தபோது அவர்கள் அதிக போதையில் இருப்பது தெரிய வந்தது. ஒரு இளைஞர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். வீடியோ எடுத்தவர்களையும் கடுமையாக திட்டினார்.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை