உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெகன் வீடு முன் இளைஞர்கள் போர்க்கோலம் YS Jagan Mohan Reddy YSRCP tirupati laddu issue controversy

ஜெகன் வீடு முன் இளைஞர்கள் போர்க்கோலம் YS Jagan Mohan Reddy YSRCP tirupati laddu issue controversy

திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்புடன் கூடிய நெய் பயன்படுத்தப்பட்டது ஆந்திராவில் மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக வெடித்துள்ளது. இந்துக்களின் உணர்வுகளை முன்னாள் முதல்வரும், ஜெகன் மோகன் ரெட்டி புண்படுத்தி விட்டதாக, சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் குற்றம்சாட்டி பேசி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த இந்து அமைப்புகளும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக கொந்தளிக்கின்றன. இந்நிலையில் குண்டூரில் உள்ள ஜெகன் மோகன் வீட்டை பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் பாஜ தொண்டர்களும் முற்றுகையிட்டனர். ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை முழங்கினர். வீடு மீது சிலர் செருப்புகளையும் கற்களையும் சரமாரி வீசி எறிந்தனர். காவி நிற பவுடரும் வீட்டு வாசலில் வீசப்பட்டது. கற்களை வீசி தாக்கியதில் செக்யூரிட்டி அறையின் கண்ணாடிகள் நொறுங்கின. வீட்டுக்குள் இந்து அமைப்பினரும் பாஜவினரும் நுழைய முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அனைவரையும் போலீசார் தடுத்தனர். 50க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை