உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜாகிர் உசேன் மறைவு: மோடி, தலைவர்கள் இரங்கல் zakir hussain|tributes|tabla maestro|

ஜாகிர் உசேன் மறைவு: மோடி, தலைவர்கள் இரங்கல் zakir hussain|tributes|tabla maestro|

உலக புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல் நல குறைவால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 73. இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜாகிர் உசேன் நெஞ்சுவலி காரணமாக 2 வாரங்களுக்கு முன் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். நேற்று இரவு அவரது உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக இரவு 11 மணி அளவில் செய்திகள் பரவின. அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர்கள் அந்த தகவல்களை மறுத்தனர். அவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். நலம் பெற ரசிகர்கள் பிரார்த்திக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் 2 மணி நேரம் கழித்து, ஜாகிர் உசேனின் உறவினர்களே அவரது மரணத்தை அறிவித்தனர்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை