உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டை வலுப்படுத்த ஸ்ரீதர் வேம்பு சொன்ன மெசேஜ்: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு

நாட்டை வலுப்படுத்த ஸ்ரீதர் வேம்பு சொன்ன மெசேஜ்: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு

நம் நாட்டின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் முன்னணி கல்லுாரிகளில் படித்த ஏராளமான பொறியாளர்கள், பல் துறை பட்டதாரிகள், பொருளாதார தேவைகளுக்காக, அமெரிக்கா செல்வது ஆண்டாண்டு காலமாக நீடிக்கிறது. நம் இளைஞர்களின் திறனை அந்நாட்டு நிறுவனங்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்தி, ஐ.டி. உள்ளிட்ட பல துறைகளில் உலகளவில் கோலோச்சுகின்றன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, சமீப காலமாக இந்தியர்கள் மீது வன்மத்தை கக்கி வருகிறது. இந்தியர்களை மோசமாக விமர்சித்தும், இந்தியர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என, முன்னணி ஐ.டி.நிறுவனமான ஜோஹோ கார்பரேஷன் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார். #SridharVembu #ZohoCorporation #USA #SoftwareEngineers #IT #InformationTechnology #USCitizens #NRI #Technology #ViksitBharat #Modi #MakeinIndia #

ஏப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை