/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சொன்னது முந்திரி ஆனா உள்ள இருந்ததே வேற! | DMK Councilor arrest | Thoothukudi
சொன்னது முந்திரி ஆனா உள்ள இருந்ததே வேற! | DMK Councilor arrest | Thoothukudi
இந்தியாவுக்கு கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. சில நாடுகளில் 100 சதவீதம் வரி செலுத்தி இறக்குமதி செய்யலாம். இந்த சூழலில் சிலர் சட்ட விரோதமாக வேறு பொருட்கள் பெயரில் கொட்டை பாக்குகளை இறக்குமதி செய்வதாக புகார் எழுந்தது. நவம்பரில் இந்தோனேஷியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் சில கன்டெய்னர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. முந்திரி பருப்பு இருப்பதாக அதில் ஆவணங்கள் இருந்தன.
ஜன 23, 2025