உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 47வது அதிபரானர் டிரம்ப்: வெளியாக போகும் 100 உத்தரவுகள்? | Donald Trump | 45th President | USA

47வது அதிபரானர் டிரம்ப்: வெளியாக போகும் 100 உத்தரவுகள்? | Donald Trump | 45th President | USA

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற மிக வயதான நபர் என்ற பெயர் அவருக்கு கிடைத்திருக்கிறது. 2020ல் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 61 நாட்களாக இருந்தது. இப்போது டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 220 நாட்களாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவி ஏற்பு விழா அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கேபிடோல் எனப்படும் பார்லிமென்ட் உள்ளரங்கில் நடந்தது. அமெரிக்காவில் இப்போது கடுமையான பனிக்காலம் என்பதால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சி உள்ளரங்கத்தில் நடந்தது. இதற்கு முன் 1985ல் ரொனால்ட் ரீகன் அதிபராக பதவியேற்ற நிகழ்வு உள்ளரங்கில் நடந்தது. பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், உலகப் பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பர்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். பொதுவாக பாதுகாப்பு காரணங்கள் கருதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களை அழைக்க மாட்டார்கள். ஆனால் அந்த பாரம்பரியத்தை உடைத்திருக்கும் டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து இருக்கிறார். சீனா சார்பாக துணை அதிபர் கலந்து கொண்டார். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்றார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ