உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முக்கியமான செய்தி சொன்னதாக பிரதமர் மோடி பெருமிதம் | HV Hande | PM Modi | Vote Cast

முக்கியமான செய்தி சொன்னதாக பிரதமர் மோடி பெருமிதம் | HV Hande | PM Modi | Vote Cast

99 வயதாகும் முன்னாள் அமைச்சர் ஹண்டே, சட்டசபை தேர்தலில் சென்னையில் ஓட்டு பதிவு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 99 வயதான நிலையிலும், நம் தேசம் தனக்கான குரலை வெளிப்படுத்துவதை நான் இன்று கண்டேன். அதேபோல், எனது ஓட்டையும் பயன்படுத்தினேன். ஒரு மருத்துவ மாணவனாக, 1946ம் ஆண்டில் நான் முதன்முறையாக ஓட்டு போட்டேன். இது வெறும் உரிமை மட்டுமல்ல; நாம் விட்டுச்செல்லும் எதிர்காலத்தின் மீதான ஒரு பொறுப்பு. உங்கள் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. வெளியே வாருங்கள். துணிந்து நில்லுங்கள். உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள் என ஹண்டே கூறியுள்ளார். இதை பாராட்டும் வகையில் மேற்கோள் காட்டியுள்ள பிரதமர் மோடி, இது ஒரு மிக முக்கியமான செய்தி என குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல டாக்டரான ஹெச்.வி. ஹண்டே, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இருமுறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் போலியோ மற்றும் தட்டம்மை ஒழிப்பில் பெரும் பங்காற்றிய ஹண்டே, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைக்கவும் நடவடிக்கை எடுத்தவர். இதுதவிர 4,500க்கு மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கட்டமைத்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #HVHande #PMModi #Vote #CastVote #99Age #Election2026 #Democracy #VotingRights #ElderlyVoters #YouthVote #CivicEngagement #IndiaVotes #Empowerment #VotingMatters #Inclusion #Participate #Narasimha Rao #PoliticalParticipation #VoicesOfAllAges

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !