சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதி கதையை முடித்த கொடூரம் | judgement | Court
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சீரங்கராயன் ஓடைக்குப்பத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர், மாற்று சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியாவை காதலித்து வந்தார். இவர்களது காதலை கானகராஜின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. எதிர்ப்பை மீறி பிரியாவை கனகராஜ் 2019ல் சாதி மறுப்பு திருமணம் செய்தார். இதனால், கனகராஜின் அண்ணன் வினோத்குமார், கடும் கோபத்தில் இருந்தார். தம்பியின் வீட்டுக்கு சென்ற வினோத்குமார், தம்பி கனகராஜ் - பிரியா தம்பதியை அரிவாளால் வெட்டி ஆணவக்கொலை செய்தார். இச்சம்பவத்தில், வினோத்குமார் உடன் அவரது நண்பர்கள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கோவை வன்கொடுமை பிரிவு வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 23ம் தேதி இறுதி விசாரணையின்போது, வினோத்குமார் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். எஞ்சிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை விவரங்களை நீதிபதி விவேகானந்தன் இன்று அறிவித்தார். குற்றவாளி வினோத்துக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.