வக்பு மசோதா பற்றிய அறிக்கை தாக்கல் எப்போது? 10 opposition mps | suspended | waqf board jpc meet
நாட்டின் பாதுகாப்பு துறை, ரயில்வே துறைக்கு அடுத்து அதிகப்படியான நிலங்கள் வக்பு வாரிய கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த சொத்துகளை கண்காணிக்க 1954ல் மத்திய அரசு வக்பு சட்டம் இயற்றியது. அதை பின்பற்றி மாநிலங்களில் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. வக்பு வாரிய நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் தேவை என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆண்டு, பார்லிமென்ட் கூட்ட தொடரின்போது வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த மசோதா பார்லிமென்ட் கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.