3 மாநிலங்களில் காங்கிரஸ்: மே.வங்கத்தில் திரிணமுல் அமோகம் 48 assembly bye election result| Maharasht
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுடன், 14 மாநிலங்களில் காலியாக உள்ள 48 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. சிக்கிம் மாநிலத்தில் 2 தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டிலும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தின் 9 தொகுதிகளில் பாஜ - 5, ராஷ்டிரீய லோக் தளம் - 1 மற்றும் சமாஜ்வாதி - 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ராஜஸ்தானின் 7 தொகுதிகளில், 6ல் பாஜவும், 1ல் காங்கிரசும் முன்னிலை பெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் கட்சியே முன்னிலையில் உள்ளது. அசாமில் பாஜ - 2 இடங்களிலும் காங்கிரஸ், அசாம் கனபரிஷத், யுபிபி தலா ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. பீகாரில் பாஜ 2 இடங்களிலும், காங்கிரஸ், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலா 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 3 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது கர்நாடகாவில் 3 இடங்களில் காங்கிரசும், கேரளாவில் 1 இடத்தில் காங்கிரசும், 1 இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், குஜராத்தில் ஒரு இடத்தில் காங்கிரசும் முன்னிலை பெற்றுள்ளது