உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவை சல்லி சல்லியாக்கிய ஆதவ் பேச்சின் 8 அம்சம் Aadav Arjuna speech decoding | DMK vs TVK | Vijay

திமுகவை சல்லி சல்லியாக்கிய ஆதவ் பேச்சின் 8 அம்சம் Aadav Arjuna speech decoding | DMK vs TVK | Vijay

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா என்ற பெயரில், ட்விஸ்ட் நிறைந்த அரசியல் மாநாடே நேற்று அரங்கேறி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் பேசிய நெருப்பு அரசியல் திமுகவை உள்ளுக்குள் எரிய வைத்து விட்டது. ஆதவ் பேசியது 100 சதவீதம் தவறு. இந்த முறை அவர் மீது நடவடிக்கை உறுதி. அவரிடம் விசிக விளக்கம் கேட்கும் என்று திருமாவளவனும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு திமுக பற்றி ஆதவ் பேசியது என்ன? இத்தனைக்கும் அவர் திமுக என்று ஒரு இடத்தில் கூட உச்சரிக்கவில்லை. ஆனால் பல விஷயங்களை போட்டு உடைத்து விட்டார். முன்பு எப்போதும் இல்லாத அளவு திமுகவை பந்தாடி விட்டார். அடுத்த முதல்வர் இவர் தான் என்று சூசகமாக ஒரு தலைவரையும் கைகாட்டினார். ஆதவ் பொடி வைத்து பேசிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இந்த புத்தக வெளியீட்டு விழா மூலம் விஜயும், திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருந்தனர். இது பற்றி முன்கூட்டியே மிகப்பெரிய விவாதம் எழுந்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் விசிக இணையும் என்று பலர் ஆரூடம் கூறினர். விஜய் சொன்ன கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு தத்துவத்தை ஆதவ் அர்ஜுனாவும் வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் இருப்பதால் திருமாவளவனுக்கு இது தர்மச்சங்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு விஷயங்களை தாண்டி கடைசி நேரத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போவதை தவிர்த்தார் திருமா. திமுக கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்று மிகப்பெரிய புயல் கிளம்பியது. இதை ஆதவ் அர்ஜுனாவும் மறைமுகமாக உறுதி செய்தார். திமுகவின் நெருக்கடியில் இருந்து திருமா விடுபடுவார் என்று சூசகமாக சொன்னார்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி