உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதவ் அர்ஜுனா டெலிட் செய்த பகீர் karur stampede | aadhav arjuna deleted post | vijay meeting stampede

ஆதவ் அர்ஜுனா டெலிட் செய்த பகீர் karur stampede | aadhav arjuna deleted post | vijay meeting stampede

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவ அதிர்ச்சியில் இருந்து இன்னும் தமிழகம் மீளவில்லை. கரூரில் இன்னமும் மரண ஓலம் கேட்கிறது. பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த சம்பவத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டன. தவெக விஜய் தான் காரணம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்போ திமுகவின் சதியால் தான் கோர சம்பவம் நடந்தது என்கிறது. இப்படி மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. சோசியல் மீடியாவிலும் சம்பவம் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே வதந்தி பரப்பியதாக 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த பரபரப்பான நேரத்தில் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் வெளியிட்ட கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக அரசை வசைபாடி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை: சமூக வலைதளங்கறில் கருத்து பதிவிட்டாலே கைது... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், gen-z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள் என்று அந்த அறிக்கையில் கூறி இருந்தார். நேபாளத்தில் ஜென் இசட் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அங்கு அரசாங்கம் கவிழ்ந்தது. புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. அதே போல் ஒரு புரட்சி தமிழகத்திலும் வெடிக்கும் என்று ஆதவ் சொன்னதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்தது. வன்முறையை தூண்டுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த ஆதவ், அவசர அவசரமாக அந்த போஸ்ட்டை டெலிட் செய்தார். இருப்பினும் அவரது போஸ்ட் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் வேகமாக பரவி வருகிறது. ஆதவை திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், கடுமையாக ஒருமையில் வசைபாடினார். அவர் கூறியது: அமலாக்கத்துறை பிடியில் சிக்கி இருக்கும் ஒரு கேடு கெட்ட ஊழல்வாதி, கூட்டத்தை காட்டி அரசியல் பேரம் செய்ய நினைத்து, ஒரு பேரிழப்பை, பெருந்துயரை உருவாக்கி காட்டிய ஆணவ கூட்டத்தின் சூத்ரதாரி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிறான். புரட்சி என்றால் பணம் கொடுத்து 100 இன்புளுயன்சர்ஸ் மூலம் நிகழ்த்தி காட்டி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறாரா என்று சாடி உள்ளார். #KarurStampede #TVKVijay #AadhavArjuna #DMKvsTVK #DMKSaravanan #viralvideo #groundreport #TVKVijayKarurStampede #StampedeAlert #KarurNews #BreakingNews #VijayUpdates #TamilNaduNews #SafetyFirst #EventSafety #TragicEvent #CrowdControl #Awareness #CommunitySupport #LocalNews #KarurUpdates #VijayCommunity

செப் 30, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Moorthy
செப் 30, 2025 09:07

திமுக அரசின் எதைச்சாதிகார, சர்வாதிகார மனப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும் . விஜய்க்கு பின்னால் ஒரு மாபெரும் இளைஞர் சக்தி இருப்பதை மறுப்பதற்கில்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ