முதல்வராக தேர்வான அதிஷி: கட்சியில் கிளம்பிய எதிர்ப்பு | Swati Maliwal | AAP Rajya Sabha MP | Atishi
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த கெஜ்ரிவால், நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஜாமின் கொடுத்த சுப்ரீம் கோர்ட் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதால் தனது முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருக்கு பின் டில்லி முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின் அதிஷி மர்லினா புதிய முதல்வராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். இவர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர். புதிய முதல்வராக அதிஷி தேர்வானது கட்சியின் ஒருமித்த முடிவு என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மிக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. இந்த குரலை எழுப்பி இருப்பவர் ராஜ்ய சபா எம்.பி சுவாதி மாலிவால். டில்லிக்கு இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட காலமாக போராடிய குடும்பத்தை சேர்ந்த அதிஷி போன்ற பெண் டில்லி முதல்வரா.. இவரது பெற்றோர், அப்சல் குரு நிரபராதி, அரசியல் சதியால் சிக்கியவர், அவரை தூக்கிலிடக் கூடாது ஜனாதிபதிக்கு பலமுறை கருணை மனு எழுதியவர்கள்.