மர்ம பணக்கட்டால் பார்லியில் வெடித்த பூகம்பம்-பரபரப்பு | Abhishek Manu Singhvi | Bjp | Parliament
காங் எம்பி இருக்கையில் பணக்கட்டு ராஜ்யசபா உள்ளே வந்தது எப்படி? வெடித்தது புதிய பஞ்சாயத்து பார்லிமென்டின் இரு சபைகளிலும் அதானி, விவசாயிகள் பிரச்னையை எழுப்பி எதிர்கட்சியினர் தொடர் அமளி செய்து வந்த நிலையில், இன்று காங்கிரசுக்கு எதிராக புதிய பிரச்னை ஒன்று ராஜ்யசபாவில் வெடித்தது. நேற்று ராஜ்ய சபா கூட்டம் முடிந்ததும் வழக்கம் போல் சபை வளாகத்தில் பாதுகாப்பு சோதனை நடந்தது. அப்போது மூத்த வக்கீலும் காங்கிரஸ் எம்பியுமான அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் கத்தையாக பணம் கிடந்தது. இதை சபை பாதுகாவலர்கள் மீட்டனர். இந்த விவகாரம் ராஜ்ய சபா தலைவர் ஜக்தீப் தன்கர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பார்லிமென்ட்டுக்கு பணக்கட்டு கொண்டு வருவது விதி மீறல் என்பதால், இது பற்றி அவர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இன்று கூட்டம் ஆரம்பித்ததும் பணம் சிக்கிய தகவலையும், விசாரணை பற்றியும் முறைப்படி சபையில் அறிவித்தார்.