அரசியல் சர்க்கஸ் தொடங்கி இருப்பதாக பாஜ விமர்சனம் | Priyanka | Congress MP | Accidentally criticizes
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் 2 நாட்கள் நடக்கிறது. லோக்சபாவில் விவாதத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். முதல் நாள் விவாதத்தில் லோக்சபா எம்.பியாக பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நிகழ்த்தினார். உன்னாவ் தொடங்கி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை எதிர்க்கட்சிகள் மீது அடுக்கடுக்கான விமர்சனத்தை முன்வைத்தார். பெண்கள், தலித், சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ அதை கண்டுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். அதானி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்க முயன்றபோது, தவறுதலாக தனது சொந்த கட்சி அரசையே விமர்சித்தார். ஒரு நபருக்காக எல்லாம் மாறுகிறது. இன்றைய அரசு அதானிக்கு அனைத்து குளிர்சாதன கிடங்குகளையும் கொடுத்துள்ளது. ஒருவருக்காக அனைத்தும் மாற்றப்படுவதால் இமாச்சலத்தில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் கதறி அழுகிறார்கள்.