/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அடக்கிய விஜயால் அமைதியான ஆதவ் அர்ஜுனா | Actor Rajnikanth | TVK Aadhav Arjuna
அடக்கிய விஜயால் அமைதியான ஆதவ் அர்ஜுனா | Actor Rajnikanth | TVK Aadhav Arjuna
திமுக அரசை கண்டித்து 12ம் தேதி தமிழகம் முழுதும் தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ், எம்ஜிஆருக்கு பின், சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என வந்த நடிகர் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது. இப்போது ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் நடிக்க போய் விட்டார். அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும்தான் உள்ளது என பேசி இருந்தார். தமிழகத்தின் பல அரசியல் கட்சி தலைவர்களும், ஆதவ் அர்ஜுனாவை கண்டித்ததோடு நடிகர் விஜய் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆதவை கண்டித்து ரஜினியும் நேற்று அறிக்கை வெளியிட்டார். காலம் பேசாது. ஆனால், காத்திருந்து பதில் சொல்லும் என அதில் சொல்லி இருந்தார்.
மார் 18, 2026