அஜித் பவார் கட்சியில் சாயாஜி ஷிண்டே ஐக்கியம் Actor Sayaji Shinde NCP Ajit Maharashtra Assembly Polls
மகாராஷ்ட்ராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக முக்கியமான தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜ கூட்டணி உள்ளது. அதேநேரத்தில், இண்டி கூட்டணியும் தனது பலத்தை நிரூபித்துக் காட்டி ஆட்சியை பிடிக்க முழு முயற்சிகளை எடுக்கிறது. பாஜ கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை உள்ளன. இண்டி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளன. லோக்சபா தேர்தலில் 30 சீட்களை இண்டி கூட்டணி கைப்பற்றியது. பாஜ கூட்டணிக்கு 17 சீட்களே கிடைத்தன. ஒரு இடத்தில் சுயேச்சை வென்றது.