உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக கொடியை மாற்ற சொல்கிறது பகுஜன் சமாஜ் | Bsp Party | actor vijay party | TVK vijay flag

தவெக கொடியை மாற்ற சொல்கிறது பகுஜன் சமாஜ் | Bsp Party | actor vijay party | TVK vijay flag

விஜய் கட்சி கொடிக்கு கிளம்பியது எதிர்ப்பு! தேர்தல் விதி மீறியதா? நடிகர் விஜய், தமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்து ஏற்றினர். சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியின் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இடம் பெற்றுள்ளது. அதன் இரண்டு பக்கங்களிலும் பிளிறும் போர் யானைகள் இடம் பெற்றுள்ளன. கொடி மற்றும் அதில் இடம்பெற்றுள்ள குறியீடுகள் பற்றி மாநாட்டில் விளக்கம் அளிப்பதாக விஜய் சொல்லியிருக்கிறார். இச்சூழலில், இந்த விஜய்யின் கட்சி கொடிக்கு, தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள யானை சின்னத்தை வேறு எந்த கட்சியும் எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்ட திருத்தத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இது தெரியாமல் விஜய் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம்பெற செய்துள்ளனர். இது தேர்தல் விதி மீறலாகும். வாக்காளர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை